மின் வாரியங்கள் கடனை குறைக்க திட்டம் : மத்திய அரசு புதிய திட்டம்


மாநில மின் வாரியங்களுக்கு உள்ள கடன் சுமையை குறைக்க மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி மாநில மின் வாரியங்களுக்கு தற்போது ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை இருப்பதாகவும், இந்த கடன் சுமையில் 50 சதவிகிதத்தை குறுகிய காலத்தில் மாநில அரசுகள் செலுத்த வேண்டும் என்று திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 50 சதவிகித கடன் சுமையை கடன் பத்திரங்கள் வழங்கி, உத்தரவாதம் அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறுகிய கால கடனை அடைக்க வேண்டும் என்பது இந்த திட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் நீண்ட கால கடன் தொகையை அடைக்கவும் வழி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. திட்டக்குழு உறுப்பினர் சதுர்வேதி தலைமையிலான குழு இந்த திட்ட அறிக்கையை தயாரித்துள்ளது.

புதியதலைமுறை     September 25, 2012 8:18 am

No comments:

Post a Comment