20 - 20 world cup cricket


இலங்கையில் நடைபெற்று வரும் 20-20  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் – அயர்லந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.கொழும்பு பிரேமதாஸா மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
முதல் பந்திலேயே அயர்லந்து தொடக்க ஆட்டக்காரர் போர்டர் ஃபீல்டு  போல்ட் ஆனார். எனினும், மற்ற வீரர்கள் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியதால், அயர்லந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட19 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. அயலர்ந்து வீரர் ஓ-ப்ரையன் அதிகபட்சமாக 25 ரன்களும், வில்சன் 21 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில், கிறிஸ் கெய்ல் 2 விக்கெட்களும், எட்வர்ட்ஸ், ராம்பால், சமி, சுனில் நரேன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
எனினும், வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பு கனமழை தொடங்கியது. நீண்ட நேரம் மழை பெய்ததால் போட்டியைக் கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்ததை அடுத்து, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. எனினும், ரன் ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்றிரவு நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டியில், டி பிரிவில் உள்ள பாகிஸ்தான் அணியை எதிர்த்து பங்களாதேஷ் விளையாடுகிறது. 
 புதியதலைமுறை September 25, 2012 8:32 am

No comments:

Post a Comment